இலங்கையின் உள்ளூர் போட்டிகளில் கலக்கும் தசுன் ஷானக; டி20 போட்டிகளில் உலக சாதனை

0
322

இலங்கையின் உள்ளூர் டி20 போட்டிகளில் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரரான தசுன் ஷானக தனது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றார்.

சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியின் தலைவராக செயற்பட்டுவரும் இவர் இரு போட்டிகளில் அதிரடியாக விளையாடி சதம் குவித்திருந்தார்.

காலி அணியுடனான போட்டியின் போது 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்களைக் குவித்திருந்தார். இதில் 12 ஆறு ஓட்டங்களும் 10 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

அத்துடன் சரகென்ஸ் அணியுடனான போட்டியில் வெறுமனே 46 பந்துகளுக்கு மாத்திரம் முகம் கொடுத்து 123 ஓட்டங்களை விளாசியிருந்தார். இதில் 16 ஆறு ஓட்டங்களும் 2 நான்கு ஓட்டங்களும் உள்ளடங்கும்.

இந்த 16 ஆறு ஓட்டங்கள் ஒரு போட்டியில் வீரர் ஒருவரால் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஆறு ஓட்டங்களாகும். கெய்லினால் பெறப்பட்ட 17 ஆறு ஓட்டங்களளே சாதனையாகக் காணப்படுகின்றது.

இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் பாகிஸ்தானுடனான டி20 போட்டியில் அறிமுகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் எதிர்வரும் டி20 உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான இலங்கை அணியில் இணைக்கப்படும் பட்சத்தில் இலங்கை அணி சிறப்பான வெற்றிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY