அல்ஜீரிய கடற்கரை ரிசார்ட்டில் தீ விபத்து: 7 பேர் பலி

0
266

அல்ஜீரிய நாட்டின் தலைநகரான அல்ஜியர்சில் உள்ள கடற்கரையோர உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

அல்ஜியர்சில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஜெரால்டாவில் அமைந்துள்ள கடற்கரையோர உணவு விடுதியில் உள்ள கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 7 பேர் பலியாகியிருப்பதாக பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY