மு.கா. தேசிய மாநாட்டில் மைத்திரி, ரணில், சம்பந்தன் பங்கேற்பர்: சட்டத்தரணி அன்ஸில்

0
223

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார் என, மு.கா.வின் அரசியல் விவகாரச் செயலாளரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், நேற்று (13) புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

‘ஜனாதிபதியுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் என, பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். மாநாட்டுக்குரிய சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுவருவதுடன், அதற்கான உயர்மட்டக் குழுவும், கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

‘கட்சியின் தேசிய மாநாடு இம்முறை, அம்பாறை மாவட்டத்தில் நடைபெறுவதால், கூடுதலான கட்சிப் உறுப்பினர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றுவார்கள் என்ற எதிர்பாரப்பு எங்களிடம் உள்ளது. பிரதேச ரீதியாகவும் மாவட்டங்கள் ரீதியாகவும் கட்சி உறுப்பினர்கள், இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கான ஏற்பாடுகளை, குறித்த பிரதேசங்களின் கட்சி முக்கியஸ்தர்கள் மேற்கொள்வார்கள்.

தேசிய மாநாட்டுக்குப் பொறுப்பாக்கப்பட்டுள்ள கட்சியின் மாநாட்டுக்குழுவின் அடுத்த கூட்டம் மிக விரைவில் அம்பாறையில் இடம்பெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில், தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வார்’ எனவும் அன்ஸில் கூறினார்.

(Tamilmirror)

LEAVE A REPLY