ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை

0
279

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான உடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, முதலுதவிப் பயிற்சி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான மூன்று நாள் வதிவிட பயிற்சிப் பட்டறை கடந்த வெள்ளிக்கிழமை (08) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) வரை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இண்டர் நியூஸ் மற்றும் ரயிட்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களின் அனுசரனையுடன், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் தேவ.அதிரனின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற மேற்படி வதிவிட பயிற்சிப் பட்டறையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 15 அச்சு, இலத்திரனியல், இணைய ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டனர்.

இங்கு ஊடகவியலாளர்களுக்கான உடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான விரிவுரைகளை சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ்மிரர் இணையம் மற்றும் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஏ.பி.மதன், சிரேஷ்ட ஊடகவியலாளரும், யாழ்பாண ஊடக கழகத்தின் தலைவருமான ஆர்.தயாபரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

அத்தோடு ஊடகவியலாளர்களுக்கு முதலுதவிப் பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சிகளை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முதலுதவிப் பிரிவுக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் ஆறுமுகம் சோமசுந்தரம் வழங்கினார்.

இதன் போது உடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, முதலுதவிப் பயிற்சி போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பான மூன்று நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை பூர்த்தி செய்த ஊடகவிலாளர்களுக்கு சான்றிதழும், முதலுதவிப் பொதியும் சிரேஷ்ட ஊடகவிலாளர்களான ஏ.பி.மதன், ஆர்.தயாபரன், தேவ.அதிரன் உட்பட முதலுதவிப் பிரிவுக்கான சிரேஷ்ட விரிவுரையாளர் ஆறுமுகம் சோமசுந்தரம், இண்டர் நியூஸ் நிறுவனத்தின் இணைப்பாளர் தஹா முஸம்மில், ரயிட்ஸ் நவ் நிறுவனத்தின் இணைப்பாளர் சானக ரூபசிங் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த ஊடகப் பயிற்சிப் பட்டறையில் ஊடகவியலாளர்கள் ஆபத்தான நிலையில் எவ்வாறு செய்தி சேகரிப்பது, செய்தி சேகரிக்கும் போது தீ விபத்து, வெள்ளம், மண்சரிவு, சுனாமி போன்ற அனர்த்தங்களில் தங்களைப் பாதுகாத்து எவ்வாறு செய்தி சேகரிப்பது, அண்ட கவர் ரீப்போட் எவ்வாறு செய்வது, புலனாய்வு ஊடக நெறியில் எவ்வாறு உத்திகளை கையால்வது, செய்தி மூலங்களை எவ்வாறு அடையாளம் கண்டு செய்தி சேகரிப்பது, ஊடகவியலாளர்கள் தங்களது அச்சுறுத்தல் மற்றும் அளவீடுகளை மதிப்பீடு செய்வது எவ்வாறு, டிஜிட்டல் பாதுகாப்பு போன்ற பல்வேறு விடயங்கள் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

3-DSC_0477 4-DSC_0264 7-DSC_0490 9-DSC_0509 10-DSC_0504 11-DSC_0239 12-DSC_0478 13-j-4526 14-DSC_0479 15-DSC_0243 DSA-4596 DSC_0496 DSC_0505

LEAVE A REPLY