(Poem) காத்தான்குடியின் மூத்தோர்கள் மொழி

0
114

Kattankudy 1உள்ளூட்டுக்க நிண்டு
ஒள்ளுப்பம் வாங்க எண்டு
பொஞ்சாதி கூப்பிட
புருசன் வந்தான்.

ஆல ஊட்டு மூலைக்க
அசவில மேல
மெத்தப் பாயொன்று
சுத்தி இருக்கிறது.

ஏலா எண்டு செல்லாம
எடுத்துத் தாங்க என்றாள்.

நெக்கேலா இப்ப
நீயே எடு என்றான்.

புறு புறுத்த பொஞ்சாதி
புளக்கடயால போய்
கொழுக்கக் கம்பொண்ட
கொண்டு வந்தெடுத்தாள்.

குசினிக்க போய்
குத்துக் கத சொன்னாள்.

எல்லா மசிரு வேலையும்
இங்க நான் செய்யனும்.

சவியாய்க் கத்த
சாப்பில இருந்த ஆம்பிள
வாயடிக்காதே
பேயடிக்கும் என்றான்.

மறுகாவும் அவள்
மனிசனக் கூப்பிட்டாள்.

திலாந்துக்கு பக்கத்தில
திராய் காயப் போட்டிருக்கன்
மாச்சல் பாக்காம
மளாரென்று எடுத்து வாங்க.

வெடுக்கெண்டு எழும்பி
வெட்டையால போகக்க
குறுக்கால லொள்ளொண்டு

குலச்சிக்கிட்டு ஓடி வர
தார்பாஜான் கட்டி
தயாரானான் அடிப்பதற்கு.

சீ சனியன் என்று
சிடுசிடுத்த ஏச
ஓடியது நாய்
ஓல வேலிக்குள்ளால்.

செப்பமில்லாத் திராய்
அப்பிக் கிடக்கு கடதாசியில
முனு முனுத்துக் குடுத்தான்
முடிந்தது சண்டை.

(Mohamed Nizous)

LEAVE A REPLY