மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை அகற்ற முடிவு

0
305

மத்தல விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை நாளை அகற்றவுள்ளதாக கிராமிய பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அங்கு 4054 மெற்றிக் தொன் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மத்தல விமான நிலையத்தை நெல் களஞ்சியப்படுத்தும் இடமாக மாற்ற, தற்போதைய அரசாங்கம் தீர்மானித்தது.

எதுஎவ்வாறு இருப்பினும் அண்மையில் கருத்து வௌியிட்ட கிராமிய பொருளாதார அமைச்சர் ஜீ.ஹெரிசன் குறித்த விமான நிலையத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்களை விரைவில் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY