ரோஹித் சர்மா புதிய சாதனை

0
351

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவின் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் நடந்தது.

இதில் அவுஸ்திரேலியா அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 171 ஓட்டங்கள் எடுத்தார், அவுஸ்திரேலிய மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்(ஆட்டமிழக்காமல்) என்ற சாதனையை படைத்தார்.

அதாவது 1979-80ம் ஆண்டில் மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக விவ் ரிச்சர்ட்ஸ் எடுத்த 153 ஓட்டங்களே இதுவரையிலும் சாதனையாக இருந்தது.

மேலும் சச்சின், பிரையன் லாராவை பின்னுக்கு தள்ளி 19 இன்னிங்ஸ்களிலேயே அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

சச்சின், பிரையன் லாரா 20 இன்னிங்களில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1000 ஓட்டங்கள் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY