போலியோ தடுப்பு நிலைத்திற்கருகில் குண்டு வெடிப்பு – 14 பேர் பலி

0
243

தென் மேற்கு பாகிஸ்தான் நகரான குவேட்டாவில் போலியோ தடுப்பு நிலையத்தின் வௌிப்புறம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை (13) அதிகாரிகள் பணிக்கு சமூகமளிக்கும் சமயத்தில் இடம்பெற்றுள்ளது. போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படும் இடங்களுக்கு செல்வதற்கு முன்னர் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று குண்டு வெடிப்பு இடம்பெற்ற பலோசிஸ்தான் மாகாண அமைச்சர் சர்வராஸ் புக்டி தெரிவித்தார்.

அப்பிரதேசத்தில் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் அதிகாரிகளுக்கு ஆயுதமேந்திய படையினரே பாதுகாப்பு வழங்குகின்றனர். அவர்களை இலக்கு வைத்து கடந்த சில வருடங்களாக இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போலியோ தடுப்பு மருந்து வழங்குவதை இஸ்லாமிய தீவிரவாதிகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் பிள்ளைகளை மலடாக்குவதற்கான மேற்கத்தீய சதியென கூறியே இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உலக நாடுகளில் இன்னமும் போலியோ தாக்கம் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ​போலியோ தடுப்பு மருந்து வழங்கும் அதிகாரிகள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று வௌிநாட்டு ஊடகவியலாளரகள் கருத்து வௌியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY