மட்டு.மாவட்டத்தின் முதலாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம்

0
362

தேசிய அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட முதலாவது அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதியமைச்சர் அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீநேசன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் ஆகியோர் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடந்த வருடம் 2,500 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களில் முடிவடையாதவை மற்றும் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கத்தில் பாகுபாடின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன்அங்கு உரை நிகழ்த்தும்போது தெரிவித்தார்.

LEAVE A REPLY