பிள்ளையானின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

0
262

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில், மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் வழிபாட்டில் பங்கு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்றைய தினம் (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இவ்வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர்களான TMVP கட்சியின் தேசிய அமைப்பாளரான பிரதீப் மாஸ்டர் மற்றும் அக்கட்சியின் உறுப்பினரான கஜன் மாமா மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு ஜனவரி 27 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Thinakaran)

LEAVE A REPLY