தற்காப்புக்காகவே ஹைட்ரஜன் குண்டு சோதனை: வடகொரியா விளக்கம்

0
225

எதிரி நாடுகளிடமிருந்து தற் காத்துக் கொள்வதற்காக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தியதாகக் வடகொரியா கூறியுள்ளது.

வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கேசிஎன்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே பல நாடுகள் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோத னையை வெற்றிகரமாக நடத்தி உள்ள நிலையில், வட கொரி யாவின் இந்த சோதனை தவிர்க்க முடியாததாகி விட்டது.

எந்த ஒரு நாட்டையும் அச்சு றுத்த வேண்டும் அல்லது ஆத்திர மூட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை நடத்தவில்லை. அதே நேரம், எதிரி நாட்டு படைகளின் தாக்குதலி லிருந்து தற்காத்துக் கொள்வதற் கான திறனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இந்த சோதனையின் முக்கிய நோக்கம்.

குறிப்பாக சொல்ல வேண்டு மானால் அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினால் அதற்கு எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்பதை உணர்த்துவதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை ஒரு முறை வீசி அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY