கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் பொத்துவிலுக்கு திடீர் விஜயம்!

0
248

கிழக்கு மாகாண நீர்ப்பாசன, விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று பொத்துவில் பகுதிக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். பொத்துவில் பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை திணைக்களங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் நோக்கில் இன்று பொத்துவில் பிரதேசத்திலுள்ள நீர்ப்பாசனத் திணைக்களம், கால்நடை, விவசாய திணைக்களங்களுக்கு சென்று அங்குள்ள குறைகளை அதிகாரிகளுடன் பேசி கண்டறிந்து கொண்டார்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள உப அலுவலகத்தை தரமுயர்த்துதல், நிரந்தர கட்டிடத்தை புனர்நிர்மானம் செய்தல், மற்றும் குளப்பகுதிகளுக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளையும் கண்டறிந்தார்.

மேலும், கால்நடை, விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் பேசி குறித்த திணைக்கள குறைபாடுகளை கணடறிந்து அமைச்சின் ஊடாக மிக விரைவில் அவைகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்விஜயத்தில் கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் கே.சிவநாதன், நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ்.திலகராஜா, அம்பாறை பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் யு.எல்.ஏ.நசார் மற்றும் பொறியியலாளர்கள், விவசாய போதனாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எம்.எஸ்.சம்சுல் ஹுதா

LEAVE A REPLY