தனியார் துறை சம்பளத்தை 3500 ரூபாவால் அதிகரிக்க பிரேரணை

0
248

தனியார் துறை ஊழியர்களுக்கு 3500 ரூபா சம்பள உயர்வை வழங்கும் வகையில் சம்பள நிர்ணய சபைகள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பிரேரணையை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன நேற்று(12) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. இதன்போது மேற்படி பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பிரகாரம் 2005 மார்ச் 4ஆம் திகதி வெளியிடப்பட்ட 1382/23 ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் இறுதியாக, திருத்தப்பட்ட 1971 ஜுன் 4 திகதி 14961ஆம் இலக்க சம்பள நிர்ணய சபை ஒழுங்குவிதியின் 31ஆவது பிரிவை திருத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது.

புதிய திருத்தத்தின் படி உப பந்தியில் 400 ரூபா என்று தெரிவிக்கப்பட்டிப்பதை 1500 என்று மாற்றவும் ஆ உப பந்தியில் 500 ரூபா என்ற பகுதியை 2000 ரூபா என்று மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் தினங்களில் இந்த திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY