பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு இனி மருத்துவ சான்றிதழ் அவசியம்

0
254

பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீர, வீராங்கனைகளும் உடற்தகுதிக்கான மருத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டியது, கட்டாயம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழ்களை வழங்குவதற்காக அங்கீகரிக்கப்பட்ட 1000 வைத்தியர்கள் பயிற்சியளிக்கப்பட்டு, நாடு பூராகவுமுள்ள வைத்தியசாலைகளில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ் வைத்தியர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பாடசாலை விளையாட்டு பணிப்பாளருக்கு வழங்கியுள்ளதாகவும், மேலதிகத் தகவல்களை http://www.health.gov.lk/ என்ற சுகாதார அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

-AD-

LEAVE A REPLY