இன நல்லுரவை பேனும் வகையில் வாழைச்சேனை காகித ஆலையினை கைத்தொழில் பேட்டையாக மாற்றுவதே பிரதி அமைச்சர் அமீர் அலியின் நோக்கம்: அன்வர் நெளசாட்

0
400

இன நல்லுரவை பேனும் வகையில் வாழைச்சேனை காகித ஆலையினை கைத்தொழில் பேட்டையாக மாற்றுவதே பிரதி அமைச்சர் அமீர் அலியின் நோக்கம் என்றும், காலத்தின் தேவைக்கேற்ப அமைச்சர் றிசாட் பதுர்டீனை தேசிய தலைமையாயாக ஏற்றுகொள்வதே சாலப்பொறுத்தமான விடயமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பின் தலைவரும் வாழைச்சேனை காகித அலையின் இணைப்பதிகாரியுமான எம்.ஜே.எம்.அன்வர் நெளசாட் உடனான நேர்காணலின் பொழுது தெரிவித்தார்.

கேள்வி:- அன்மையில் வர்த்தக வானிபத்துறை அமைச்சினால் வாழைச்சேனை காகித ஆலைக்கு தாங்கள் புதிய இணைப்பாளராக நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றீர்கள்?

நெளஸாட்:- இந்த நியமனமானது வர்த்தக வானிபதுறை அமைச்சின் செயலாளரினால் ஒப்பிடமிடப்பட்டு காகித ஆலைக்கு இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டு சில கடமைப்பட்டியல்களும் தரப்பட்டுள்ளது. அந்தவகையில் தொழிலாளிகளுக்கும் அமைச்சுக்கும் இடையில் நல்லதொரு தொடர்பினை ஏற்படுத்தும் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் என்ற வகையில் கிடைக்கப்பெற்ற நியமனத்தினை வைத்து முடிந்தளவு இன நல்லுறவினை பலப்படுத்தும் வகையிலும், வரும் காலங்களில் காகித ஆலையினை பலப்படுத்தும் செயற்பாடாக முன்னெடுக்க முடியும் என்பதனையிட்டும் மகிழ்ச்சி அடைக்கின்றேன்.

கேள்வி:- முக்கியமாக வர்த்தக வானிபத்துறை அமைச்சினால் இந்த நியமனம் உங்களுக்கு வழங்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

நெளஸாட்:- வாழைச்சேனை காகித ஆலையோடு நீண்ட தூரம் நாங்கள் பயணித்த மக்கள் என்ற அடிப்படையிலும், எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் இருக்கின்ற இளைஞர் யுவதிகளினுடைய தொழில் வாய்ப்புக்களை கருத்தில் கொண்டும், பிரதேசத்தினை அண்டியவாறு தொழில் பேட்டையினை அமைக்கும் நோக்கத்துடனுமே இந்த நியமனம் வர்த்தக வானிபத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி:- கடந்த அரசாங்க காலத்தில் நீங்கள் மஹிந்த ராஜபக்ஸவின் தீவிர ஆதரவாளராக காணப்பட்டீர்கள். அக்காலத்தில் காகித ஆலையின் பணிப்பாளாராக இருந்த திரு மங்கள சீ செனரத் என்பவர் பக்கசார்பாக நடந்து கொண்டதாக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அதனை நீங்கள் தற்பொழுது எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

நெளஸாட்:- ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் மங்கள சீ செனரத் என்பவர் பக்கசார்பாக நடந்து கொண்டார் என பெரியளவில் காணப்பட்டதாக நான் அறியவில்லை. ஏன் என்றால் அங்கிருந்த தொழிலாளர்கள் எல்லாம் அவர்மேல் விருப்பம் கொண்டவர்களாகவே இருந்தார்கள்.

உயர் மட்டத்தில் இருக்கின்ற சிலருக்கு அவருடைய நிருவாக கட்டமைப்பில் நாட்டம் இல்லாமையினால் அவரோடு முரண்பட்ட கருத்துக்களோடு காணப்பட்டார்கள். இருப்பினும் முன்னாள் ஜனாதிபதியோடு நான் மட்டுமல்லாது ஒட்டு மொத்த முஸ்லிம் தலைவர்கள் எல்லோருமே சேர்ந்து செயலாற்றியமையானது அவரவருடைய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு இருந்த சிக்கலான விடயங்களை அவிழ்தெறிவதற்காகவே அன்றி தனிப்பட்ட காரணங்களுக்காக இல்லை என்பதனை இங்கு ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புக்கின்றேன்.

கேள்வி:- பிரதேசத்தின் பிரதி அமைச்சராக இருக்கின்ற அமீர் அலி மாட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் அவருடைய அரசியல் நடவடிக்கைகளின் தாக்கம் காகித ஆலையில் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பாக்கின்றீர்கள்?

:- இன ஐக்கியம் என்ற வகையில் வாயளவில் பேசிவிட்டு கொள்கையளவில் சம்பந்தப்படாமல் இருக்கின்ற எங்களுக்கு மத்தியில் இருக்கின்ற தலைமைகளுக்கு மத்தியில் பிரதி அமைச்சர் அமீர் அலியை முன்னெடுத்துக்காட்டாக செயற்படுகின்ற அரசியல்வாதியாக பார்க்கின்ற அதே நேரத்தில், வாழச்சேனை காகித ஆலையை மாவட்டத்தில் இன நல்லுரை வலுப்படுத்துகின்ற பாலமாக அமையும் வகையில் மாபெரும் தொழில்பேட்டையாக மாற்றுவதே பிரதி அமைச்சர் அமீர் அலியின் நோக்கமாக இருக்கின்றது.

அந்த வகையிலே மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் என்ற ரீதியில் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அரசியல் அபிவிருத்தி நடவடிக்கைகள் காகித ஆலையிலும் பெரும் தாக்கத்தினை செலுத்தும் என எதிர்பாக்கின்றேன்.

கேள்வி:- சமூக வலைத்தளங்களில் அமைச்சர் றிசாட் பதுர்டீனை தேசிய தலைவர் என வர்ணிக்கின்றார்கள். கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் என்ற வகையில் தேசிய தலைவர் என்ற பதத்தினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

நெளஸாட்:- தேசிய தலைமை என்பது தேசிய ரீதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்கக் கூடிய தலைமையா? அல்லது தேசிய ரீதியில் ஆதரவு பெற்ற தலைமையா? அல்லது தேசிய ரீதியில் பெற்ற அங்கீகாரத்தினை குறிப்பதா? என்பதனை கருத்தில் கொண்டே அதனை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

அந்த வகையில் எங்களுடைய கட்சியினுடைய அமைச்சர் றிசாட் பதுர்டீன் இம்முறை நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்லாது தேசிய ரீதியில் அதிகப்படியான வாக்குகளை கட்சிக்கு பெற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல் பாராளுமன்றத்திலே ஐந்து ஆசனங்களையும் தக்கவைத்துக் கொண்டுள்ளமையினை வைத்து அமைச்சர் றிசாட் பதுர்டீனை தேசிய தலைவர் என அழைப்பது சாலப்பொறுத்தம் என நினைக்கின்றேன்.

கேள்வி:- கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முற்பாடு தீவிர சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளியாக காணப்பட்டீர்கள். தற்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரசினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றீர்கள். அந்த வகையிலே முஸ்லிம்களின் தேசிய தலைமை என்கின்ற பொழுது உங்களுடைய கட்சியின் தலைமை அமைச்சர் றிசாட் பதுர்டீனா அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையான அமைச்சர் றவூப் ஹக்கீமா? தேசிய தலைமைக்கு பொறுத்தமானவர்?

நெளஸாட்:- கடந்த காலங்களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தீவிர ஆதரவாளனாகவும், மறைமுகமாக அதன் வளர்ச்சிக்கு பிரதேசத்தில் பங்காற்றியிருக்கின்றேன் என்பது உண்மையான விடயமாகும். ஆனால் பிரதேச மக்களின் முக்கிய தேவைகளை அக்கட்சி கருத்தில் கொண்டு செயற்படாமை காரணமாக பிரதேச மக்களுக்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொள்ள வேண்டிய தெவைப்பாடு எனக்கேற்பட்டது.

அந்த வகையில் வாழைச்சேனைக்கு தேவையான தனியான பிரதேச சபை மற்றும் கல்குடா மக்களுக்கு தேவையான தூய குடிநீர் போன்ற முக்கிய பிரச்சனைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையினால் பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எங்கள் மத்தியில் ஏற்பட்டமையினாலேயே நாங்கள் அமைச்சர் றிசாட் பதுர்டீனுடம் பிரதி அமைச்சர் அமீர் அலியுடனும் கைகோர்த்து பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக முன்னின்று உழைக்கின்றோம்.

மறுபக்கத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசானது பிரதேச மக்களின் வாக்குகளை கறிவேப்பிளைகளாக பயண்படுத்திய வரலாற்றினைத்தான் நாங்கள் ஒவ்வொரு தேர்தல்களில்லும் அவதானித்து வருக்கின்றோம். ஆகவே தற்பொழுது உள்ள எங்கள் தலைமையான றிசாட் பதுர்டீன் பிரதேச மக்களின் தேவையின தனது சொந்த தேவையாக கருதி செயற்பட்டு வருவதினால் அவரைத்தான் நாங்கள் தற்பொழுது தேசிய தலைமையாக ஏற்றுக்கொண்டு எமது அரசியல் பணியினை பிரதேசத்தில் முன்னெடுத்து வரும் நிலைக்கு தள்ளப்படிருக்கின்றோம்

கேள்வி:- கட்சியின் செயலாளருக்கும் தலைமைக்கும் இடையில் பலகருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்ற இந்த சமயத்தில் நீங்கள் கட்சியின் செயலாளரின் பக்கமா அல்லது தலைவரின் பக்கமா இருக்கின்றீர்கள்?

நெளஸாட்:- கட்சியின் செயலாளர் கட்சியினை தூக்கி நிறுத்தி கட்சியோடு பயணித்த சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன. ஆனால் தற்பொழுது எமது தலைமையானது நவீன காலத்து அரசியல் தேவைக்கேற்றவாறு முகம்கொடுக்க கூடிய தலைமையாக எங்கள் தலைமை செயற்பட்டு வருகின்றமையினை எவறாலும் மறுக்க முடியாது.

அந்த வகையிலியே கட்சியின் தொண்டர்கள் ,உயர்மட்ட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என எல்லோரும் கட்சியின் தலைமையோடு சேர்ந்து பயணிப்பதே சிறந்தது என கருதுகின்றேன்.

கேள்வி:- உங்களுக்கு கிடைத்த புதிய நியமணமான காகித ஆலையின் இணைப்பாளர் பதவிக்கு பிற்பாடு எவ்வாறான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றீர்கள்?

நெளஸாட்:- கடந்த காலங்களில் ஊழியர்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கின்ற சம்பள நிலுவைகளை உடனடியாக கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம். அதனோடு சேர்த்து ஊழியர்களின் சுயவிருப்ப கோரிக்கை, சம்பள சீராக்கம் மற்றும் நன்கொடை தொகை என்பன அமைச்சின் அங்கீகாரத்துடன் மிகவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். முக்கியமாக தொழிலாளர்களின் நலன் கருத்தில் கொள்ளப்பட்டு அமைச்சர் றிசாட்பதுர்டீனின் உதவியுடன் சகல நடவடிக்கைகளையும் திறம்பட முன்னெடுக்க இருக்கின்றோம்.

கேள்வி:- காகித ஆலையில் வேலை செய்த முஸ்லிம் ஊழியர்களின் எண்ணிக்கையானது பாரியளவில் குறைந்துள்ளமைக்கான காரணம் எதுவென நினைக்கின்றீர்கள்?

நெளஸாட்:- காகித ஆலையில் ஊழியர்களின் அடிப்படை சம்பளமானது முக்கிய விடயமாக கருதப்பட்டது. 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த காகித ஆலையானது வாழைச்சேனயின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம். ஆனால் முஸ்லிம் பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் காணப்பட்டமையினால் அதிகளவான முஸ்லிம் ஊழியர்கள் ஆரம்பத்தில் பணியாற்றினார்கள் காலப்போக்கில் யுத்த சூழ்நிலை காரணமாகவும், விடுதலைப் புலிகளின் கெடுபிடிகள் காரணமாகவும், முஸ்லிம்கள் அதிகளவில் விவசாயத்தின் பக்கம் கவணம் செலுத்தியதன் காரணமாகவும், பின் வந்த காலங்களில் முஸ்லிம்கள் சம்பள மட்டத்தோடு முரண்பட்ட காரணங்களினாலும் முஸ்லிம் ஊழியர்களின் எண்ணிக்கையில் சரிவேற்பட்டது எனக் கூறலாம்.

கேள்வி:- கடந்த காலங்களில் காகித ஆலையில் இருந்த பெருமதிமிக்க இயந்திரங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் விற்கப்பட்டதாக பரவலாக பேசப்படுக்கின்றதே இது சம்பந்தமான உங்களுடைய கருத்தென்ன?

நெளஸாட்:- அங்கிருக்கின்ற தொழில் சங்கங்களோடு ஆரம்பத்தில் இது சம்பந்தமாக பேசியிருந்தோம் அந்த வகையிலே பாவனைக்குதவாத மோட்டார் இயந்திரங்கள் விற்கப்பட்டதாகவும் அதற்காக முகாமைத்துவ அனுமதி பெறப்பட்டதாகவும் பின்வந்த நாட்களில் அறிந்து கொண்டோம்.

அதைத் தவிர நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அல்லது குறிப்பிட்டு கூறக்கூடிய பாரிய இயந்திரங்கள் விற்கப்பட்டதற்கான எந்த ஆதரங்களும் அங்கு தென்படகூடியதாக இல்லை. அவ்வாறு இடம்பெற வில்லை என்றுதான் ஊழியர்களும் தெரிவிக்கின்றார்கள்.

கேள்வி:- பிரதி அமைச்சர் அமீர் அலி கல்குடாவில் தான் பங்கு பற்றும் சில நிகழ்வுகளில் கல்குடா பிரதேசத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிதுள்ளதாகவும், சில மருந்தகங்களில் போதை தரக்கூடிய மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாகவும் விளிபூட்டி வருகின்றார். ஆனால் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராக இருக்கின்ற நீங்கள் இது சம்பந்தமான விடயத்தில் மெளனம் காற்பதற்கான காரணமென்ன?

நெளஸாட்:- உண்மையில் இவ்விடயமானது எல்லோருக்கும் கவலையளிக்க கூடிய விடயமாகவே இருக்கின்றது. முதலில் எமது பிரதேசத்தின் அதிகாரத்தின் தலைமையக கருதப்படுக்கின்ற எமது பிரதேச அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீ அலியினுடைய வாயினால் அந்த சொற்கள் வருவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கின்றேன். ஏனென்றால் குடும்பத்தில் இருக்கின்ற ஒரு பிள்ளையினை தகப்பன் கண்டிக்கின்ற செயற்பாட்டிற்கும் மூத்த சகோதரன் கண்டிக்கின்ற செயற்பாட்டிற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அந்த பார்வையிலேயே பிரதி அமைச்சர் அமீர் அலியின் விளிப்புணர்சியினை நான் மதித்தவனாக குறிப்பிட்ட போதைப்பொருள் பாவை பிரச்சனையினை அவதானித்து வருகின்றேன்.

கேள்வி:- உங்களுடைய கட்சியின் தலைமையானது தேசியத்திலே பாரிய பிரச்சனையாக விலப்பத்து பிரச்சனைக்கு முகம் கொடுத்து வருகின்றது. அதனை எவ்வாறு நீங்கள் நோக்குகின்றீர்கள்?

நெளஸாட்:- இதனை ஒரு இனவாதம் பேசக் கூடிய ஒரு கும்பளினால் முன்னெடுக்கப்பட்ட பிரச்சனையாகவே நான் கருதுகின்றேன். அண்மையில் இடம்பெற்ற தனியார் தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது மூன்று ஊடகவியலாளர்களை வைத்து கொண்டு நான்காவதாக இனவாதம் பேசக் கூடிய பெளத்த தேரரும் சேர்ந்து எங்களுடைய தலைமையின் வளர்ச்சியினை பொறுத்துக்கொள்ள முடியாத காரனத்தினால் இனவாத செயற்பாடினை தூண்டும் வகையிலும், இனங்களுக்கிடையே முரண்பாட்டினை உருவாக்கி இந்த நல்லாட்சியில் தோற்றுவிக்க கூடிய செயற்பாடாக காணப்பட்டது.

இவ்வாறான பாரிய பிரச்சனைகளுக்கு மர்ஹும் பெரும் தலைவர் கூட சாதுரியமாக விடையளித்து சாட்டை அடிகொடுத்த வரலாறுகள் இருக்கின்றன. அந்த வகையிலே எங்களுடைய தலைமையும் தேசிய தலைமை என்பதற்கு அப்பால் சக இனங்களும் சம உரிமையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதனை முன்னெடுத்து செயற்படுக்கின்ற பொழுது எவ்வாறன இனவாதம் பேசக்கூடிய கும்பல்கள் தோன்றி சேறுபூச நினைத்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமையும் அல்லாஹ்வின் உதவியும் அவருக்கு இருக்கின்றது என நாங்கள் ஒருமித்த நிலைப்பாட்டுடன் இருக்கின்றோம்

கேள்வி:- மடக்களப்பு மாவட்டத்தில் உங்களுடைய கட்சியினை பிரதி நிதித்துவப்படுத்திய இரண்டு மாகண சபை உறுப்பினர்கள் வெளியேறிய நிலையில் வருக்கின்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கு உங்களுடைய கட்சியானது எவ்வாறு முகம் கொடுக்க இருக்கின்றது?

நெளஸாட்:- மட்டக்களப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வாக்கு வங்கியாக கருதப்படுகின்ற இடமாக கல்குடா முஸ்லிம் பிரதேசமே அதிகமாக பேசப்படுக்கின்றது. கடந்த தேர்தல்களிலும் அது நிரூபணமாயிருக்கின்றது. கடந்த தேர்தல்களில் ஏறாவூரினை சேர்ந்த சகோதரர் சுபைர் மற்றும் காத்தான்குடியினை சேர்ந்த சிப்லி பாரூக் போன்றவர்கள் கல்குடா மக்கள் அளித்த ஒட்டு மொத்த வாக்குகளை வைத்தே மாகாண சபை கதிரைகளில் உட்கார்ந்தார்கள்.

அந்த வகையிலே வருக்கின்ற மாகாண சபை தேர்தலாக இருந்தாலும் சரி உள்ளூராட்சி மன்ற தேர்தலாக இருந்தாலும் சரி மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான கட்சி தாவும் நபர்களின் சேட்டைகளினால் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது எந்த இழப்புக்களையும் சந்திக்காது என்பதனை ஆணித்தரமாக இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி:- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், உங்களுடைய கட்சியின் செயலாளர் , பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாகாண சபை உறுப்பினர் சுபைர் போன்றவர்கள் உங்களுடைய கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து அரசிய நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அறியக்கிடைக்கிடைக்கின்றது. அவ்வாறு அமைத்தால் உக்களுடைய கட்சியானது அவர்களின் கூட்டணியினை மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றதா?

நெளஸாட்:- தேசியத்திலே எவ்வாறான பெரிய கட்சிகளாக இருந்தாலும் சிறிய அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி சில நபர்கள் முரண்பட்டு கொண்டு குழுக்களாக பிரிந்து சென்று கூட்டணி அமைப்பதும், எதிராக செயற்படுவது புதிய விடயமல்ல.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகப் பெரும்பான்மையினை பெற்றுக்கொள்ளக்கூடிய சக்தி முஸ்லிம் கங்கிரசிற்கு இருக்கின்றது. ஆகவே இவ்வாறனவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்று கூட்டணி அமைத்து செயற்படுவதினால் அவர்களுடைய அரசியல் வாழ்க்கை மட்டுமே சூனியமாகுமே தவிர அதனால் அகில இலங்கை மக்கள் காங்கிரசிற்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

கடைசியாக ஒரு விடயத்தினை இக்கு ஜாபகப்படுத்திக்கொள்ள விரும்புக்கின்றேன் எனது ஜனரஞ்க பத்திரிகையாகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற ஒரே தமிழ் பத்திரிகையான நவமணி பத்திரிகை காரியாளையமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனம் தெரியாதோரினால் அழித்தொழிக்கப்பட மேற்கொள்ளபட்ட முயற்யினை அறிந்து மிகவும் மனதார கவலைப்பட்டேன்.

கடந்த அரசாங்ஜ்கத்தில் ஊடகதுறைக்கு பலவழிகளிலும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சியிலும் இவ்வாறு துர்பாக்கிய சம்பவங்கள் இடம் பெறுக்கின்றமையினை இட்டு மிகவும் கவலை அடைந்தவனாக அரசாங்கமு சட்டமும் உரிய நடவடிகையினை மேற்கொள்ள வேண்டும் என கூறிக்கொள்வதோடு நஅனியின் வெற்றிக்காகவும் அதன் நீண்ட பயணத்திற்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வினை பிரார்த்திக்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY