நவமணி பத்திரிகையானது ஸியா கொள்கையினை பரப்புவதாக முகநூலில் பதியப்பட்ட செய்தியானது உண்மைக்கு புறம்பானது

0
496

முகநூலில் நவமணி பத்திரிகையானது தேசியத்திலே ஸியா கொள்கையினை பரப்புவதற்கான பாலமாகவும் ஊடகமாகவும் காணப்படுவதாக ஊடகமொன்றில் செய்தியானது உண்மைக்கு புறம்பானது என நவமணி பத்திரிகையின் முகாமைத்துவம் பத்திரிகையின் வாசகர்களுக்கு தெரிவிக்கின்றது.

அத்தோடு குறித்த முகநூலில் (ஷீயாக்களை படிப்போம்) நவமணியின் ஆரம்ப நிருவாக உறுப்பினர் எம்.ரி.எம்.முஸம்மில் மற்றும் பிரதான ஆசிரியர் என்.எம்.அமீனின் பெயர்கள் சியா கொள்கையினை பரப்புவதற்காக செயற்படுக்கின்றவர்கள் என குறித்த முகநூலில் சுட்டிக்காட்டப்படிருப்பதானது மனவேதனை அளிக்ககூடிய விடயமாக காணப்படுக்கின்றது என்றும் நவமணி முகாமைத்துவம் மேலும் குறிப்பிட்டது.

மேலும் நவமணி முகாமைத்துவம் குறிப்பிட்ட அறிக்கையில் குறித்த ஆரம்ப நிருவாக உத்தியோகத்தரான எம்.ரி.எம்.முஸம்மில் தற்பொழுது நவமணியில் நவமணியில் நிருவாக உத்தியோகத்தர் கடமையில் இருந்து விலகிவிட்டார் என்றும், அண்மையில் நவமணியினை தேசிய ரீதியில் சந்தை படுத்தும் முகமாக இலங்கையின் பல இடங்களுக்கும் சென்று ஊடக விளிப்புணர்ச்சி மற்றும் ஊடகத்தின் தேவைப்பாடு சம்பந்தமாக மக்களுக்கு விளிப்பூட்டும் நிகழ்வின் அடிப்படையிலேயே பொலன்னறுவை பெண்கள் குர் ஆன் மத்ரஸாவிலும் இலவசமாக நவமணி பத்திரிகைகள் மாணவிகளுக்கு விநியோகிக்கப்படிருந்தன. ஆனால் குறித்த மத்ர்ஸா எவ்வகையான கொள்கையினை பின்பற்றுகின்றது என்பதனை நாங்கள் கருத்தில் கொள்ளாதது எங்களுடைய பத்திரிகையின் சந்தைப்படுத்தல் முக்கியத்துவத்தினையே முக்கியமாக கருத்தில் கொள்ளப்பட்டது.

அன்மையில் கூட கல்குடா மீராவோடை பள்ளிவாயலில் சியாக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பத்து தீர்மானங்களையும் நவமணி பத்திரிகையானது 11.01.2016 அன்று பிரசுரித்திருந்தது என்பதனை இங்கு ஞாபகப்படுத்திகொள்வதோடு நவமணி பத்திரிகையின் நிருவாக கட்டமைப்பானது முன்பிருந்தனை விடவும் தற்பொழுது மாறுப்பட்டதாக காணப்படுவதாக அதன் புதிய தவிசாளாராக பாயிஸ் முஸ்தபா மற்றும் புதிய பணிப்பாளாராக எம்.ரி.எம்.ரிஸ்வி ஆகியோர் நவமணி பத்திரிகையினை ஃபிரி லங்கா மீடீயா லிமிட்டட் என்ற கம்பனி பெயரில் முன்னெடுத்து வருவாதாகவும் குறித்த எதிர்ப்பறிக்கையில் நவணியின் முகாமைத்துவம் குறிப்பிடுகின்றது.

அத்தோடு சிரேஸ்ட ஊடகவியலாளரும் நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான என்.எம்.அமீன் முஸ்லிம் சமூகத்தின் விடிவிற்காக வேண்டியும், உரிமைகளுக்காக வேண்டியும் தனது ஊடகமெனும் ஆயுதத்தினை பயன்படுத்தி வயோதிப வயதிலும் இஸ்லாமிய வரையறைக்குள் தன்னாலான பங்களிப்பினை செய்யும் முக்கிய இலங்கை வாழ் முஸ்லிம்களின் சொத்தாக கருதப்படுபவரை இவ்வாறு (ஷீயாக்களை படிப்போம்) எனு முகநூலில் ஷீயா என முத்திரை குத்தியுள்ளமையானது மனவேதனை அளிக்கின்றது.

****(ஷீயாக்களை படிப்போம்) முக நூலில் வெளியான நவமணிக்கு எதிரான செய்தியினை இங்கு உங்களின் பார்வைக்கு தருக்கின்றோம்.

***ஷியாயிஷமும் அதற்கு துணைபோகும் நவமணி பத்திரிகையும். கட்டாயம் பகிரவும்
யூதர்களும் சரி யூத தத்துப்பிள்ளைகளாகிய ஷியாக்களும் சரி சமூகத்தில் சிந்தனை குழப்பங்களை ஏற்படுத்த மீடியாக்களை அதிகம் பயன்படுத்துவர்.

சிந்தனை குழப்பத்தை உருவாக்குவதனால் எவ்வளவு தெளிவான சமூகம் இருந்தாலும் அச்சமூகத்தை ஆயுதம் இல்லாமல் , எந்த சேதமும் இல்லாமல் வெரும் ஆரம்ப முதலிடு மாத்திரம் கொண்டு குழப்பத்தை கால காலமாக ஏற்படுத்தலாம். என்பதனாலயே யூத மற்றும் ஷியா காபிர்கள் சிந்தணை குழப்பத்திற்கு புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை தன் கைவசம் உருவாக்கி வைத்திருப்பர்.

அந்தவகையில் ஷியாக்கள் இலங்கையில் உருவாக்கிய பத்திரிகைகள் தூது, வெற்றி பேன்ற பத்திரிகைகள். இவை வெளிப்படையாக ஷியா சிந்தணையை போதிக்கும் ஷியாக்களின் வெளிப்படயான பத்திரிகைகள். இதை பற்றிய தெளிவு மக்களிடத்தில் இருக்கிறது. ஆனால் ஷியாக்களுடைய மிக இரகசியமான பத்திரிகையே நவமணி. இதனை பற்றிய தெளிவுக்காகவே இந்த பதிவு.

இந்த நவமணி பத்திரிகைக்கு ஆரம்பம் தொட்டு இன்று வரை பண உதவி வழங்குபவர்கள் ஈரான் ஷியாக்கள். இப்பத்திரிகையின் நஸ்டம் அணைத்தையும் பொறுப்பேற்பதும் ஈரான்தான்.

மேலும் ஆரம்பத்தில் இது ஷியா பத்திரிகை என்று இனம் காட்டாமல் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவி மெது மெதுவாக ஷியாயிஷத்தை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறது.

இப்பத்திரிகை இலவசமாக சில தரப்பினருக்கும் விநியேகிக்கப்படுகிறது. ஷியா சிந்தணையை வளர்க்கும் சில முஸ்தபா பல்கலைக் கழகம் போன்ற நிறுவனம் மற்றும் மன்பஉல் ஹூதா ஆண்கள் மற்றும் ஷயினபியா பெண்கள் மதராசாக்களில் மாணவர்களுக்கு இப்பத்திரிகையிணை இஸ்லாமிய சர்வதேச பத்திரிகை என அறிமுகப்படுத்தி இப்பத்திரிகை பற்றி மேலான எண்ணத்தை உருவாக்கி விநியோகிப்பர்.

ஷியா மற்றும் ஈரான் பற்றிய மேலான எண்ணத்தை உருவாக்கும் இப்பத்திரிகை சில காலப்பகுதிகளில் மதரசா மாணவர்களுக்கு இலவசமாகவும் விநியோகிக்கப்படுகிறது.

அற்ப பணத்திற்காக இதன் கட்டுரை ஆசிரியர்கள் நிருவாகிகள் விலை போய் உள்ளனர். தாஹா முஸம்மில் ,அமின் ஹாஜி என்றழைக்கப்படுபவர் பேன்ற இப்பத்திரிகை நிருவாகிகளும், ஆசிரியர்களும் ஈரான் பணத்திற்காக இலங்கையில் விபச்சாரத்தை மார்க்கமாக கொண்ட ஷியாயிசத்தை பரப்பி வருகின்றனர்.

ஈரான் ஷியாக்கள் இவர்களுக்கு பாரிய சலுகையை வழங்கி வருவதனால் ஈமானை இழந்து மார்க்கத்தை விற்று வயிறு வளர்க்கின்றனர். பணத்திற்காக அல்லாஹ்வை எதிர்க்க தயாராகிவிட்டனர்.

அன்பு முஸ்லிம் சமூகமே! இவ் ஷியா பத்திரிகையை புறக்கணிக்க வேண்டும். வருங்கால சமூகத்தை விபச்சார ஷியா மதத்திலிருந்து பாதுகாத்து கொள்ள இப்பத்திரிகை பற்றிய தெளிவை அப்பாவி மக்களுக்கு ஏற்படுத்துங்கள்…
ஷியாக்களித்தில் எச்சரிக்கயாய் இருங்கள்.

அஹமட் இர்ஸாட்

LEAVE A REPLY