வீட்டையும் பாடசாலைச் சூழலையும் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்திருப்பதில் மாணவர்களின் பங்கு அளப்பரியது : கிருஷ்ணபிள்ளை

0
220

சமுதாயத்தில் நல்ல சிந்தனை மாற்றத்தைக் கொண்டுவந்து வீட்டையும் பாடசாலைச் சூழலையும் பிரதேசத்தையும் சுத்தமாக வைத்திருப்பதில் மாணவர்களின் பங்கு அளப்பரியது என செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்வை செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

டெங்கு நோய் என்பது நாட்டையும் வீட்டையும் அச்சுறுத்துகின்ற ஒன்றாக தற்சயமம் மாறியுள்ளது. இந்த அச்சுறுத்தலை வெறுமனே சுகாதாரத்துறை அதிகாரிகள் மாத்திரமோ அன்றேல் நிருவாக அதிகாரிகள் மாத்திரமோ தனித்தனியே ஒழித்துக் கடம்டிவிட முடியாது.

இது ஒரு கூட்டு முயற்சியினால் சாதிக்க வேண்டிய விடயம். அந்த வகையில் பாடசாலை மாணவர்களுக்கூடாக டெங்கு நோய் பற்றிய விழிப்புணர்வை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே எடுத்துச் செல்ல முடியும். இதற்கு உறுதுணையாக ஆசிரியர்கள், அதிபர்கள், ஏனைய அதிகாரிகள் இருந்து பெற்றோருக்கும் விழிப்புணர்வூட்டி வீட்டையும் நாட்டையும் பாதுகாக்க முடியும்.

பிரதேசப் பாடசாலை மாணவரிடையே டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக சித்திரம் வரைதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடாத்தப்பட்டு அவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் கௌரவிப்பும் வழங்கப்படுகின்றன” என்றார்.

இந்நிகழ்வில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஐ. சிறிநாத், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். கிருஷ்ணபிள்ளை, யுனொப்ஸ் திட்ட அதிகாரிகள், ஏறாவூர் பொலிஸ், பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

LEAVE A REPLY