வஸீம் விவகாரத்துடன் தொடர்புபடுத்துவது முஸ்லிம்களுடன் பிரச்சினையை ஏற்படுத்தவே:திட்டமிட்ட சதி என்கிறார் நாமல் ராஜபக்ஷ

0
284

தமது குடும்­பத்­துக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கவே வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் திட்­ட­மிட்டு தாம் தொடர்­பு­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக ஹம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.

இது திட்டமிட்ட சதியாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வஸீம் தாஜுதீன் விவ­காரம் தொடர்பில் ராஜ­பக்ஷ குடும்பம் தொடர்பு பட்­டுள்­ள­தாக பர­வ­லாக வெளிப்­ப­டுத்­தப்­படும் கருத்­துக்கள் தொடர்பில் கேட்ட போதே நாமல் ராஜ­பக்ஷ இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
தேர்தல் காலத்தில் முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பெறு­வ­தற்­கான ஒரு பிர­சா­ரமே வஸீம் தாஜுதீன் விவ­கா­ர­மாகும்.

இனந்­தெ­ரி­யா­த­வொ­ருவர் அக்­கொலை தொடர்­பான பொய்­யான கட்­டு­ரை­யொன்றை எழுதி முகப்­புத்­த­கத்தில் வெளி­யிட்டார்.

அதனை அர­சி­ய­லாக்­கி­னார்கள். அதனை பயன்­ப­டுத்தி முஸ்லிம் வாக்­கு­களை பெற்­றுக்­கொண்­டார்கள்.

அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் சி.சி.ரி.வி காணொ­ளியில் முக்­கிய நப­ரொ­ரு­வரின் மகனை கண்­ட­தாக கூறு­கின்றார். வெளி­வி­வ­கார அமைச்சர் சர்­வ­தேச சமு­கத்­திடம் வாக­னத்­தையும் முக்­கிய இளம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரையும் கண்­ட­தாக கூறு­வ­தோடு அடுத்த வாரம் கைது செய்­யப்­ப­டு­வா­ரென்றும் கூறு­கின்றார்.

ஆனால் மொறட்­டுவ மற்றும் கொழும்பு பல்­க­லையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­களில் சி.சி.ரி.வியில் யாரு­மில்லை என்­கி­றது.ஆகவே இவை அனைத்­துமே பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள்.

ஏமாற்றும் செயற்­பா­டுகள். தாஜுதீன் எமது பாட­சா­லையில் கல்­வி­கற்­றவர். எம்­மோடு ஒன்­றாக விளை­யா­டி­யவர். அவரை தினமும் கண்­டி­ருக்­கின்றேன். மஹிந்த ராஜபக் ஷவுக்கும், நாமல் ராஜபக் ஷவுக்கும் முஸ்லிம் சமூகத்­திற்கும் இடையில் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கவே இவ்­வா­றான பொய் ­ப­ரப்­பு­ரை­களை செய்­தார்கள்.

நானும் அவரும் ஒரே பாட­சா­லையில் ஒன்­றாக விளை­யா­டி­யுள்ளோம். ஒரே கழ­கத்­திற்­காக விளை­யா­டி­யி­ருக்­கின்றோம். எமக்­கி­டையில் எந்­த­மு­ரண்­பா­டு­களும் எழுந்­த­தில்லை. ஒரே பாட­சா­லையில் ஒன்­றாக விளை­யா­டி­யுள்ளோம்.

ஒரே கழ­கத்­திற்­காக விளை­யா­டி­யி­ருக்­கின்றோம். எமக்­கி­டையில் எந்­த­மு­ரண்­பா­டு­களும் எழுந்­த­தில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

-Vidivelli-

LEAVE A REPLY