சொத்து குவிப்பு: சீனாவில் முன்னாள் துணை மந்திரிக்கு 15 ஆண்டு சிறை

0
200

சீனாவில் கடந்த 1996 முதல் 2013-ம் ஆண்டுவரை பொது பாதுகாப்புத்துறை துணை மந்திரியாக பதவி வகித்தவர், லி டாங்ஷெங். தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, லஞ்சம் வாங்கிய இவர், 22 மில்லியன் யுவான் (அமெரிக்க மதிப்புக்கு 35 லட்சம் டாலர், இந்திய மதிப்புக்கு சுமார் 23 கோடியே 41 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்) அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அந்நாட்டு அரசு அவர்மீது வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, முன்னாள் துணை மந்திரி லி டாங்ஷெங்-குக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY