பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் பயிற்சி நெறி

0
226

மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைக் கொண்ட 15 மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் பயிற்சி நெறி திங்கள் மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆறு மாத கால எல்லையைக் கொண்டதாக இப்பயிற்சி நெறி இடம் பெறவுள்ளது. மாற்றுத் திறனாளிகளாக இருந்த போதும் அவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காகவும் தனித்துவத்தைப் பேணுவதற்காகவும் இந்த வாழ்வாதார தொழில் முயற்சிக்கு தாம் வலுவூட்டுவதாக இந்தப் பயிற்சி நெறிக்கு நிதி அனுசரணை வழங்கும் டெப் லிங்க் னுநயக டுiமெ நிறுவனத்தின் இயக்குநர் போதகர் எஸ்.எஸ். ஞானராஜா தெரிவித்தார்.

பயிற்சி நெறி துவக்க நிகழ்வில் டெப் லிங்க் னுநயக டுiமெ நிறுவன இயக்குனர் பேதகர் எஸ்.எஸ். ஞானராஜா அவர்களும் பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் ஆரோக்கியா மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அப்துல்லாஹ்

LEAVE A REPLY