கால்பந்து வீரர்கள் சென்ற பஸ் விபத்து; 20 பேர் பலி: மெக்சிகோவில் சம்பவம்

0
268

மெக்சிகோவின் கிழக்கு மாநிலமான வெராகிரஸ்சில் உள்ளூர் கால்பந்து போட்டிக்காக அமெச்சூர் கிளப்பை சேர்ந்த வீரர்கள் மற்றும் இரசிகர்களை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த பஸ் அடோயாக் பகுதியில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால், பஸ் முழுவதுமாக உடைந்து சேதமடைந்ததோடு, குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மேலும் படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பஸ் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்தால் வெராகிரஸ் மாநிலத்தில் விளையாட்டு வீரர்கள் மத்தியில் சோகம் ஏற்பட்டு உள்ளது.

LEAVE A REPLY