நல்லாட்சி என்ற பதம் அரசியலுக்காக துஸ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

0
261

“உயர்ந்த அரத்தம் கொண்ட வார்தைகள் பல எமது அரசியல் வாதிகளினால் தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் நல்லாட்சி என்ற வார்த்தையும் அரசியலுக்காக துஸ்பிரயோகம் செய்யப்படுவனை அனுமதிக்க முடியாது” என NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தியதான செயற்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பாக, ஆதரவாளர்கள் மத்தியில் விளக்கமளிக்கும் நோக்குடன் NFGGயினால் மக்கள் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த சனிக்கிழமை NFGGயின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியக் காரியாலயத்தில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
.
அப்துர் ரஹ்மான் தனதுரையில் மேலும் தெரிவித்ததாவது …
“எமது அரசியல் வரலாற்றில் பல்வேறு கால கட்டங்களிலும் அரசியல் தலைமைகளினால் ஜனநாயகம், தேசப்பற்று, அமானிதம், மக்கள் நலன் போன்ற உயர்ந்த அர்த்தம் கொண்ட சொற்பதங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்த வரிசையில் இன்று நல்லாட்சி எனும் சொற்பதமும் துஸ்பிரயோகம் செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாமது.

உண்மையில் இவ்வாறான சொற்பிரயோகங்களின் உள்ளார்ந்த உயர்ந்த அர்த்தங்கள் புரிந்து கொள்ளப்படாமலும் அவற்றை நடைமுறையில் செயற்படுத்தாமலுமே இது வரை காலங்களில் அரசியல்வாதிகள் அவற்றைப்பயன்படுத்தி வந்துள்ளனர். தங்களது பதவிக் கதிரைகளை பாதுகாப்பதற்காகவும் சுயநல அரசியல் இலாபங்களுக்காகவுமே அரசியல்வாதிகளினால் இவ்வாறான சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த வரிசையில் இன்று நல்லாட்சியைப் பற்றிப்பேசுகின்ற பலரினால் உண்மையில் நல்லாட்சியினை நடைமுறைப்படுத்த முடியவில்லை.எனவேதான் வெறுமனே நல்லாட்சியைப்பற்றி வெறும் கோஷங்களை மட்டும் எழுப்புகின்ற அரசியலை கைவிட்டு நல்லாட்சியை நடைமுறைப்படுத்தி அதன் உண்மையான நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கின்ற சூழலினை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறான அர்த்தபூர்வமான அரசியலினை முன்னெடுக்கவே நாம் உறுதியுடன் உழைத்து வருகின்றோம். எனவேதான், இந்நாட்டிற்கு அவசியப்படுவது வெறும் ஆட்சி மாற்றமின்றி நல்லாட்சியின் அடிப்படையிலான ஆட்சி முறை மாற்றமாகுமென நாம் ஆரம்பம் முதலே அறைகூவல் விடுத்து வருகின்றோம்.

இன்று நாட்டில் நல்லாட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியும் கவலையும் ஆதங்கமும் கலந்த ஒரு மனோ நிலையே எமக்கிருக்கிறது. இந்த நாட்டில் நிலவி வந்த அராஜகமான ஆட்சியினை முடிவிற்கு கொண்டு வந்ததன் மூலம் அடக்குமுறைகளற்ற, ஜன்னாயக தன்மைகளை கொண்ட ஒரு ஆட்சி முறை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

அதேவேளை இந்த மாற்றத்தை பயன்படுத்தி நல்லாட்சியின் அடிப்படை பண்பகளை இன்னும் வலுப்படுத்தி இதைவிடவும் பலமடங்கு அர்த்த பூர்வமான நல்லாட்சியினை இந்நாட்டில் நிறுவியிருக்க முடியும் எனும் கவலையும் ஆதங்கமும் மனதில் இருக்கிறது. இந்த விடயங்களைப் வலியுறுத்தி அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டும் வகையிலேயே நாம் ஒரு அறிக்கையினையும் இன்று வெளியிட்டு வைத்துள்ளோம்”எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் NFGGயின் தவிசாளர் உட்பட அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்நிகழ்வில் NFGGயின் பொதுச்செயலாளர் முஹம்மட் நஜா, தேசிய கொள்கை பரப்புச்செயலாளர் சிராஜ் மஷ்ஹுர் தலைமைத்துவ சபை உறப்பினர்களான Dr. SM. ஸாஹிர், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. ILM ரிபாஸ் மற்றும் NFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், பிராந்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், மகளிர் அணி உறுப்பினர்கள், NFGGயின் ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY