நிந்தவூர் பிரதான வீதியில் வாகன விபத்து!

0
298

கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில், நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில் சற்று முன்னர் (11) கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அருகிலிருந்த மதகில் மோதியதில் சேதத்திற்குள்ளாகியுள்ளது.இதன்போது, குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதோடு, விபத்து காரணமாக எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-Thinakaran-

LEAVE A REPLY