சிரியாவில் பள்ளி மீது ரஷ்யா விமான தாக்குதல்: 8 குழந்தைகள் பலி

0
229

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக, அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அனைத்து தரப்பினரையும் குறிவைத்து ரஷியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த இரு தினங்களாக ரஷ்ய படையினர் உக்கிரமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், தீவிரவாதிகளுடன் பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் நேற்று அலெப்போ மாகாணத்தின் அஞ்சாரா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பள்ளி மீது குண்டு விழுந்து வெடித்தது. இதில், பள்ளியின் ஆசிரியர் மற்றும் 8 குழந்தைகள் பலியானதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இதுதவிர குழந்தைகள், ஆசிரியர்கள் என 20 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மாகாணத்தில் அரசுப் படைகளுக்கும் புரட்சிப் படைகளுக்குமிடையே நேற்று முதல் கடுமையான விமான தாக்குதல்களும், நேரடி தாக்குதல்களும் நடைபெற்றன. இதில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போவில் ராக்கெட் தாக்குதலில் 3 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY