நீரில் மூழ்கி மூவர் பலி

0
433
Galle-Face-green
காட்சிப் படம்

கடல் மற்றும் வாவியில் குளித்த மற்றும் தவறி விழுந்ததில் மூவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

காலி முகத்திடல் கடலில், கடந்த 10 ஆம் திகதி மாலை 5 மணியளவில் குளித்துக்கொண்டிருந்த மாளிகாவத்தையைச் சேர்ந்த 16 வயதான மொஹமட் ஹர்ஷாட் என்ற இளைஞனே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி முகத்திடலில் கடலில் மூழ்கியவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவ்விடத்துக்கு வந்திருந்த, மாளிகாவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட 34 வயதான சிந்தக சமீர என்பவர், காலிடறி, கடலுக்குள் விழுந்து பலியாகியுள்ளார்.

இதேவேளை, அம்பலாங்கொடை பிரதேசத்தில், வாவியொன்றில் குளித்துக் கொண்டிருந்த 63 வயதான நபரொருவர், நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளார்.

(Tamilmirror)

LEAVE A REPLY