மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் மனிதாபிமானப்பணி

0
312

நல்லாட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் அரசடித்தீவு ஷக்தி மகளிர் இல்லத்தில் தங்கி வாழும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

ஷக்தி மகளிர் இல்ல ஸ்தாபகர் திரு. புஷ்பலிங்கம் தலைமையில் இடெம்பெற்ற இந்நிகழ்விற்கு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பெர்னாண்டோ, சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வீ.கமலதாஸ், பிரதித்தலைவர் ஜுனைட் நளீமி, மட்டு அம்பாறை இந்து ஆலயங்களின் ஒன்றிய தலைவர் ஜானமுத்து துரையப்பா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு தம்சின் நிறுவன பணிப்பாளர் நிசங்க மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

DSC00768 DSC00782

LEAVE A REPLY