24 மணித்தியாலங்களில் ஜனாதிபதிக்கு 3200 முறைப்பாடுகள்

0
340

நேற்று ஆரம்பிக்கப்பட்ட “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” திட்டத்திற்கு முதல் 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதியிடம் 3000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1919 தொலைபேசி இலக்கம் மற்றும் இணைய முகவரி ஊடாக 3200 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எந்தவொரு பிரஜையும் நேரடியாக ஜனாதிபதியிடம் தனது பிரச்சினைகள் ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தபால் மூலம், மின்னஞ்சல் மூலம், தொலைபேசி மூலம், மொபைல் அப்ளிகேசன் மூலம் இவ்வாறு ஜனாதிபதியிடம் மக்கள் நேரடியாக தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தகவல்கள் தொடர்பிலும் துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்துகொண்டு ஓராண்டு பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

(EN)

LEAVE A REPLY