மீன்பிடிக்கச் சென்றவர் ஜனாஸாவாக மீட்பு

0
322

கிண்ணியா குறிஞ்சாக்கேணி ஆற்றுக்கு நேற்று (08) இரவு எட்டு மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தரொருவர் இன்று (09) சனிக்கிழமை காலை ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார் என கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான முகம்மது சபருள்ளா (வயது 50) என்பவரே இவ்வாறு ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியரான இவர், பிரபல பாடகருமாவார்.

ஓய்வு நேரங்களில் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள ஆற்றில் வலை வீசி மீன்பிடித்து, கறிக்கான தனது வீட்டுச் செலவை சமாளித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில், அவர் நேற்றும் மீன் பிடிக்கச் சென்றுள்ளார்.

இன்று அதிகாலையில் இருந்து பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஜனாஸாவை கண்டெடுத்தனர். ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், இவரது மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

(TM)

LEAVE A REPLY