தன்னை கொலை செய்ய முயன்றவருக்கு மன்னிப்பளித்த ஜனாதிபதி

0
323

நல்லாட்சியின் ஒரு வருட பூர்த்தியை கொண்டாடும் இத்தருணத்தில் தன்னை கொலை செய்ய முயன்ற இளைஞனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (8) மன்னிப்பு வழங்கினார்.

கடந்த 2006ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக பணியாற்றிய சந்தர்ப்பத்தில் பொலன்னறுவையில் வைத்து தன்னை கொலை செய்ய முற்பட்ட இளைஞனுக்கு இன்று (08) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நடைபெற்ற நல்லாட்சியின் ஒருவருட பூர்த்தி தேசிய விழாவில் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார்.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரான சிவராஜா ஜெனிவன் என்ற குறித்த நபரது கைகளை பற்றி, புன்னகைத்த வண்ணம் உரையாற்றிய ஜனாதிபதி அவரது தலையை தடவி வழியனுப்பி வைத்தார்.

பொலன்னறுவை – மன்னம்பிடிய பகுதியில் வைத்து, குறித்த நபர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு பத்து வருட சிறைதண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY