iPhone 7 டிஸ்பிளே எப்படியிருக்கும்? வெளியான புகைப்படம்

0
115

iPhone 7 பற்றிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் Display எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ஐபோன் 7 நீர் உட்புகவிடாத தன்மையுடன் வெளிவர இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அதன் Display தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன, அதில், iPhone 6s மற்றும் iPhone 6s Plus – ல் இருப்பது போலவே iPhone 7 – லும் Display உள்ளது. கொஞ்சம் மாற்று வசதியாக, 3D Touch chip மற்றும் LCD Flex கேபிள்கள் ஐபோனின் பல்வேறு இடத்தில் உள்ளன.

இந்த புகைப்படத்தை apple.club.tw என்ற தளம் வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது வரவிருக்கும் iPhone 7 மிகப்பெரிய பேட்டரி திறனுடன் இயக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் iPhone 7 சந்தையில் கால்பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY