உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

0
343

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

ஏறாவூர் 4ஆம் வட்டாரத்திலுள்ள 150 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஏறாவூர் 4ஆம் வட்டாரத்தில் ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முன்னால் வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல் ஜெயினுத்தீன் ஆகியோர் கலந்துகொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிரின் முயற்சியினால் வருடாவருடம் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களுக்கு இவ்வாறான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

(றியாஸ் ஆதம்)

mss (2) mss (3)

LEAVE A REPLY