கொடுமையிலும் கொடுமை: 22 வருடங்களாக சொந்த மகளுடன் உறவு கொண்டு 8 பிள்ளைகளுக்கு தாயாக்கிய தந்தை

0
742

தனக்கு பிறந்த சொந்த மகளை கடந்த 22 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து குடித்தனம் நடத்தி வந்த தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஆர்ஜென்டீனாவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் தீவிர தேடுதலுக்கு பின்னர் அவரை கைது செய்துள்ளனர்.

அர்ஜென்டீனாவில் லொரெட் நகரில் 56 வயதான குறித்த தந்தை தனது மனைவி பிரிந்து சென்றதில் இருந்து தனது 9 வயது மகளுடன் உறவுகெள்ள ஆரம்பித்துள்ளார்.

இந்த உறவுமூலம் கடந்த 22 வருடங்களில் அவர் 8 குழந்தைகளுக்கு தனது தந்தை மூலமாகவே தாயாகியுள்ளார்.

இது தொடர்பில் குறித்த யுவதி தெரிவிக்கையில்,

தனது தாய் தந்தையை விட்டு பிரிந்து சென்றதும் நான் எனது தந்தைக்கு மனைவியானேன். அவர் எனக்கு கணவரானார்.

அவர் தன்னை செக்ஸ் அடிமை போலவே நடத்தியதாகவும், வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்வதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

தம்மை 22 ஆண்டுகளாக கொடுமைப்படுத்திய தந்தைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள தனக்கு நீதி கிட்டும் என பாதிக்கப்பட்ட மகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று தந்தையின் உறவினர்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,

தமது வாழ்க்கையை நாசப்படுத்திய அவரை சிறைக்கு அனுப்புவதே தமது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY