பாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை இன்று சமர்பிப்பு

0
207

Ranil in Parliamentபாராளுமன்றத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த பிரேரணை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பு நிர்ணய சபையை உருவாக்குவது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த யோசனைத்திட்டம் தொடர்பில் உருவாகியுள்ள சிக்கல் தொடர்பில் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் சபையில் இல்லாத பட்சத்தில் அவருக்கு பதிலாக 7 உப தலைவர்கள் செயற்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(NF)

LEAVE A REPLY