காகிதாலை ஊழியர்களின் எண்ணத்தை ஈடேற்றுவதே அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் இலக்கு

0
310

காகிதாலை ஊழியர்களின் விருப்பான சுய விருப்பக் கோரிக்கையினை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளையும், அமைச்சரவை அங்கீகாரத்தினையும் எமது தேசியத்தலைவர் ரிஷாத் பதியுதீன் செய்து முடித்துள்ளார்கள் என வர்த்தக, கைத்தொழில் அமைச்சின் கடதாசி ஆலைக்கான இணைப்பதிகாரியும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளைஞர் அமைப்பாளர் அன்வர் நௌஷாத் அவர்கள் தெரிவித்தார். காகித ஆலையின் தொழிற்சங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வுகளில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்;

கிழக்கு மக்களின் ஆரம்பகால சொத்தான காகித ஆலையினை குறிப்பிட்ட காலப்பகுத்தியினுள் மீள் கட்டுமானத்துடன், கைத்தொழில் பேட்டைகளை கொண்ட ஒரு பிராந்தியமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் எமது அமைச்சர் மேட்கொன்டுள்ளார். சிறுபான்மை மக்களின் உண்மைத்தலைமையான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை கிழக்கு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் உண்மையான கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் எமது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும், பிரதி அமைச்சருமான கௌரவ ஆளுளு அமீர் அலி அவர்கள் கிழக்கின் இனப்பாகுபாடற்ற, செயற்றிறன் மிக்க ஒருவராக செயற்பட்டு வருகின்றமை எமது மக்களுக்கு வரப்பிரசாதமே. அத்துடன் எமது ஊழியர்கள் இதுவரை காலமும் காட்டிவந்த ஆலையின் மீதான பற்றை தொடர்ந்து வர வேண்டும். இதன் மூலம் தான் எமது எதிர்கால சந்ததியினருக்கு இவ்வளத்தை பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சப்னி

LEAVE A REPLY