“சிங்ஹ லே” எங்களுடையதே: பொது பல சேனா

0
390

நாட்டில் தற்­போது விமர்­ச­னங்­க­ளுக்­குள்­ளா­கி­யுள்ள ‘சிங்ஹ லே’ ஸ்டிக்கர் பின்­ன­ணியில் பொது­ப­ல­சேனா அமைப்பில் இருந்த இளை­ஞர்­களே செயற்­பட்டு வரு­கி­றார்கள்.

இதில் பௌத்த குரு­மார்கள் சம்­பந்­தப்­ப­ட­வில்லை என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

‘சிங்­ஹலே’ ஸ்டிக்­கர்கள் நாடு பூரா­கவும் வாக­னங்­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும், பொது இடங்­க­ளிலும், வீடு­க­ளிலும் ஒட்­டப்­ப­டு­வதை நாம் எதிர்க்­க­வில்லை, ஆனால் வீட்­டு­ம­தில்­க­ளிலும் சுவர்­க­ளிலும் ‘சிங்­ஹலே’ என்று எழு­து­வதை நாம் எதிர்க்­கிறோம் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில் ‘சிங்­ஹலே’ என்ற ஸ்டிக்­க­ருக்கு முஸ்­லிம்கள் ஏன் பயப்­ப­டு­கி­றார்கள் என்று தெரி­ய­வில்லை. இது எமது நாட்டின் உண்­மை­யான பெயர். நாட்டின் பெயரை வாக­னங்­க­ளிலும் வீடு­க­ளிலும் வர்த்­தக நிலை­யங்­க­ளிலும் ஒட்டிக் கொள்­வதில் என்ன தவறு இருக்­கி­றது?

1815ஆம் ஆண்டில் பிரித்­தா­னியர் ஆட்சிக் காலத்தில் இலங்­கையின் பெயர் ‘சிங்­ஹலே’ என்றே இருந்­தது. நாட்டின் பெயரை ‘சிங்­ஹலே’ என்று மீண்டும் மாற்றிக் கொள்­வ­தற்­கா­கவே இந்­தத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்த நாடு தமி­ழர்­க­ளுக்கோ முஸ்­லிம்­க­ளுக்கோ சொந்­த­மா­ன­தல்ல. தமி­ழர்கள் ‘சிங்­ஹலே’ நாட்டை இலங்கை என்று அழைக்க முடி­யாது. அர­சாங்கம் இன்று சர்­வ­தேச சூழ்ச்­சிக்குள் சிக்கிக் கொண்­டுள்­ளது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் மூலம் ஒற்­றை­யாட்­சிக்குப் பங்கம் ஏற்­ப­ட­வுள்­ளது. பௌத்த மதத்­துக்­கி­ருந்த முதன்மை இடம் இல்­லாமற் போக­வுள்­ளது. இவ்­வா­றான சூழ்­நிலை ஏற்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்­கா­கவே ‘சிங்­ஹலே’ ஸ்டிக்கர் வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தத் திட்­டத்தை பொது­ப­ல­சேனா ஆத­ரிக்­கி­றது. நாட்டின் மூலை முடுக்­கு­க­ளி­லெல்லாம் இந்த ஸ்டிக்கர் ஒட்­டப்­படும் என்றார்.

இதே­வேளை ஞான­சார தேரர் இதன் பின்­ன­ணியில் பிக்­குகள் இல்லை என மறுத்­தாலும் ‘சிங்­ஹலே’ ஸ்டிக்கர் ஒட்டும் திட்­டத்தை தாமே மேற்கொண்டு வருவதாக பௌத்த குருமார் அடங்கிய ‘சிங்கள ஜாதிக பலமுனுவ’ என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது.

ஊடக மாநாடு நடாத்தி இந்தப்பணியினை தாமே முன்னெடுப்பதாக விளம்பரப்படுத்தியுள்ளது.

-Vidivelli-

LEAVE A REPLY