பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்: ஜம்மு-காஷ்மீரிலும் உணரப்பட்டது

0
264

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாக பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டிய படாக்‌ஷன் என்ற பகுதியில் சுமார் 232 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு 7.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 390 பேர் உயிரிழந்தனர். இதில் பாகிஸ்தானில் மட்டும் 276 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY