சீனாவில் மேலும் ஒரு பெரும்பணக்காரரைக் காணவில்லை

0
302

சீனாவின் மிகப் பிரபலமான ஆடையலங்கார நிறுவனம் ‘மீட்டர்ஸ்போன்வே’யின் தோற்றுநரான பெரும்பணக்காரர் ஸூ செங்ஜியன் காணாமல்போயுள்ளார்.

சுயமாக முன்னேறியவரான தொழிலதிபர் ஸூவின் சொத்து மதிப்பு சுமார் நானூறு கோடி டாலர்கள் ஆகும்.

ஸுவைத் தொடர்புகொள்ள முடியாது இருப்பதால் தமது பங்குகளில் வர்த்தகம் செய்வதை நிறுத்திவைத்துள்ளதாக மீட்டர்ஸ்போன்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனாவில் போன மாதம் இன்னொரு பெரும் தொழிலதிபர் குவோ குவங்ச்சங் பல நாட்களுக்கு எங்கு போனார் என்று தெரியாமல் இருந்தது.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரிகள் அவரை விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது.

(BBC)

LEAVE A REPLY