கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் ஆஜர்

0
309

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பாரிய ஊழல் – மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்றும் ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளின் ஒரு தரப்பினர் என்ற ரீதியில், கோட்டாபய ராஜபக்ஸவுக்கு இன்று ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா கூறினார்.

அத்துடன் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட நான்கு சாட்சியாளர்களுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் டி.எம்.டி. வேத்தேவ, கடற்படையின் முன்னாள் கமாண்டர் எம்.பி. ஹெட்டியாராச்சி மற்றும் லெப்டினன் கமாண்டர் டோனி ராஜேந்திர ஆகியோரும் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

வர்த்தகர் ஒருவருக்கும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், இன்றைய தினம் சமூகமளிக்க முடியாதென அவர் எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

LEAVE A REPLY