கல்லடி விபத்தில் மூவர் காயம்; வேன் சாரதி கைது!

0
372

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லடி, வேலூர்ப் பகுதியிலிருந்து பாடசாலைக்கு மாணவிகள் இருவரை ஏற்றிச்சென்ற மோட்டார் சைக்கிளும் ஆரையம்பதியிலிருந்து பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த வானும் மோதியதில், அம்மோட்டார் சைக்கிளில் பயணித்த பாடசாலை மாணவிகள் இருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதியை கைதுசெய்துடன், வானைக் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(அத தெரண)

batti acc 1 batti acc 3

LEAVE A REPLY