பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2016

0
86

DSC099122016ம் ஆண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (07) பொத்துவில் தொகுதி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத் தலைவரும், பிரதி சுகாதார அமைச்சருமான பைசால் காசீம் தலமையில் பொத்துவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேசத்தின் சென்ற வருட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வும், இந்த வருடத்திற்கான அபிவிருத்தி தொடர்பில் அதாவது, நீர்ப்பாசனம், விவசாயம், மீன்பிடி, போக்குவரத்து, சுகாதாரம், வீடமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகள், ஒதுக்கீடுகள், முன்திட்டங்கள் என்பன மொழியப்பட்டு சபையில் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸர்ரத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன், முப்படையினர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ். சம்சுல் ஹுதா)

DSC09916 DSC09919 DSC09961 DSC09942

LEAVE A REPLY