“சிங்ஹலே” ஸ்டிக்கரின் பின்னணியில் முக்கிய அமைச்சர்!

0
600

“சிங்ஹலே” ஸ்டிக்கரின் பின்னணியில் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவரே செயல்படுகின்றார். எனவே இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என “மஹிந்த அணி” ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மக்களை அடக்கு முறைக்குள்ளாக்கி “லிபரல்வாத” பொருளாதாரத்தை திணிப்பதற்கே அரசியலமைப்பு மாற்றத்தை கொண்டு வர அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு தமிழ் சிங்கள மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தி அதன் பழியை இணைந்த எதிர்க்கட்சியான எம்மீது சுமத்தி அரசியல் குளிர்காய்வதற்காக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பங்களிப்புடன் “சிங்ஹலே” (சிங்கத்தின் இரத்தம்) என்ற ஸ்டிக்கர்கள் அச்சிடப்பட்டு நாடு பூராவும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதனை எமது உளவுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். அது எங்கு அச்சிடப்படுகிறது என்பதையும் நாமறிவோம். இவ் விடயத்தை நாம் பாராளுமன்றத்தில் எழுப்பவுள்ளதோடு இது தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக் குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளோம்.

(Virakesari)

LEAVE A REPLY