டாக்டர் ஹாபிஸ் சம்மந்தமான செய்தியில் எந்த உண்மையும் இல்லை: அமைச்சர் ரிஷாத் மறுப்பு

0
350

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹாபிஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணையவுள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளாதாகவும் நேற்று (07)செய்திகள் வளிவந்தன.

குறித்த செய்தியின் உண்மைத் தன்மைகளை அறிவதற்காக ஊடக வலையமைப்பு ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீனை தொடர்புகொண்டு கேட்டது.

அதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

”மு.காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மூத்த சகோதரரான டாக்டர் ஹாபிஸ் நல்ல மனம்கொண்டவர், அனைவருடனும் அன்பாகப் பேசக்கூடியவர்.

அவர் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தினார் என்றும் வெளிவந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.

இது டாக்டர் ஹாபிஸை மனதளவில் பாதிக்கும் செய்தி” என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

LEAVE A REPLY