உயிரிழந்த நிலையில் காட்டு யானை கண்டுபிடிப்பு!

0
348

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பன்சேனை நாவலடிப்பள்ளம் பகுதிக் காட்டில் உயிரிழந்த நிலையில் சுமார் 18 வயது நிரம்பிய ஆண் யானை ஒன்று வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர்.

கடந்த காலத்தில் இப்பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த யானை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டுயானைகளின் தாக்குதல்கள் காரணமாக இப்பகுதி மக்கள் தொடர்ச்சியான இழப்புகளை எதிர்கொண்டு வந்ததாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அப்துல்லாஹ்

7d9e88ae-6f6a-49a5-ac1b-68a3386a29da 890fe49d-3f48-4fa7-bc64-dbca7f03d1e2 2540ab86-dc65-4c2c-ae2a-63ab2c78d63c 7129ec25-c60d-4a03-996d-0f8a3e06d9ce

LEAVE A REPLY