இறைத்தூதரை அவமதித்ததாக நைஜீரிய மத தலைவருக்கு தூக்கு

0
358

முஹமது நபியை அவமதித்த குற்றச்சாட்டில் நைஜீரிய மதத்தலைவர் ஒருவருக்கு இஸ்லாமிய நிதிமன்றம் ஒன்றினால் துக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு நகரான கானோவில் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்கும் வகையில் அப்துல் நயாப் என்ற மதத்தலைவர் மீது ரகசியமான முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரது நான்கு ஆதரவாளர்களுக்கு கடந்த ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் நைஜீரிய ஷரிஆ நீதிமன்றத்தால் மத நிந்தனை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் சந்தர்ப்பமாக இது இருந்தது. திருமணத்திற்கு அப்பால் பாலியல் உறவு போன்ற ஏனைய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகின்றபோதும் அவை செயற்படுத்தப்படுவதில்லை.

நயாப் செனகல் நாட்டைச் சேர்ந்த ஷெய்க் இப்ராஹிம் நியஸ்ஸே என்பவரால் நிறுவப்பட்ட பிரிவொன்றின் மாதப்போதகராவார். இந்த மதப் பிரிவு மேற்கு ஆபிரிக்காவில் பெரிய அளவில் ஆதரவாளர்களை கொண்டுள்ளது.

நயாப் தனது போதனை ஒன்றில், “இறைத்தூதர் முஹமதுவை விடவும் நியஸ்ஸே மிகப்பெரியவர்” என குறிப்பிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இது பெரும் வன்முறையை ஏற்படுத்தியது.

நைஜீரியாவில் 1999 ஆம் ஆண்டு சிவில் அரசு உருவான பின்னர் அங்கு பல வடக்கு மாகாணங்களில் ஷரிஆ சட்டம் அமுலுக்கு வந்தது.

LEAVE A REPLY