வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான CCTV காட்சிகளை வெளிநாட்டிற்கு அனுப்பி ஆராய நீதிமன்றம் அனுமதி

0
304

ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் குறித்த விசாரணைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் CCTV காட்சிகளை அமெரிக்கா அல்லது வேறொரு நாட்டிற்கு அனுப்பி ஆராய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று அனுமதி வழங்கியுள்ளது.

CCTV காட்சிகளை அனுப்பவுள்ள நாடு தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டார்.

இந்த CCTV காட்சிகளை கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவில் ஆய்வுக்கு உட்படுத்த முடியாமற்போனதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மிகவும் இருள் சூழ்ந்த சூழ்நிலையில் காணொளிகள் பதிவாகியுள்ளதன் காரணமாக, அவற்றை இந்த நாட்டினுள் ஆய்வுக்கு உட்படுத்த முடியாதென கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்திருந்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தது.

வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-NF-

LEAVE A REPLY