ஓட்டமாவடியில் வழிகெட்ட ஷீஆ கொள்கைக்கு எதிரான இஸ்லாமிய மாநாடு நாளை

0
537

தூய இஸ்லாமிய மார்க்கத்தினையும், ஸஹாபாக்களையும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களினது மனைவிமார்களையும், இஸ்லாமிய அடிப்படை கொள்கைகளையும் விமர்சிக்கும் ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைக்கு எதிரான மாநாடு இன்ஷா அழ்ழாஹ் நாளை (08) வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ளதாக மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் நிறுவாகத்தினர் தெரிவித்தனர்.

இஷாத் தொழுகையை தொடர்ந்து ஓட்டமாவடி – மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயளில் இடம்பெறவுள்ள வழிகெட்ட ஷீஆ இயக்கம் தொடர்பிலான இஸ்லாமிய மாநாடு, இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றியும் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமயத்தவர்கள் மத்தியிலும் இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கம் என்றவகையில் அதன் அமைதியை சீர்குழைக்க ஷீஆக்களினால் முன்னொடுக்கப்படும் இஸ்லாம் பற்றி பிழையாக விளக்கங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இச் சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.

எனவே, இம் மாநாட்டில் இஸ்லாமிய சகோதர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயல் நிறுவாகம் அழைப்பு விடுத்துள்ளது.

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

LEAVE A REPLY