தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: UAEயில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது

0
288

ஐக்கிய அமீரக நாடுகளில் நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் போடும் பணி ஒப்பந்தத்தின் அறிக்கை தொழிலாளர்களின் தாய் மொழியில் இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர் நலன் கருதி பணி ஒப்பந்தம் உள்ளிட்ட மூன்று புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் வேலை ஒப்பந்த சட்டத்தின்படி, இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு அயல்நாட்டிலிருந்தோ கொண்டு வந்து பணியமர்த்தப்படும் தொழிலாளர்கள் / ஊழியர்களின் பணி ஒப்பந்த அறிக்கை அவர்களின் சொந்த தாய் மொழியிலேயே இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு வழங்கப்படும் ஒப்பந்த கடிதத்தில் அவர்களின் வேலை விபரங்கள், சம்பள விபரங்கள், வேலை நேரங்கள் போன்றவை குறித்து தெளிவாக குறிப்பிட வேண்டும்.

இப்புதிய சட்டங்கள் புத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என ஐக்கிய அரபு அமீரக தொழிலாளர் நலத்துறை மந்திரி அறிவித்திருந்தார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

தாய் மொழியில் ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதன் மூலம் படிப்பறிவு குறைவான தொழிலாளர்களும் தங்களின் அடிப்படை உரிமைகள், வேலை விபரங்கள், சம்பள விபரங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY