அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்

0
328

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் (07.01.2016) இன்று ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் சுகாதார, சுதேச வைத்தியத்துரை பிரதி அமைச்சருமான பைசல் காசீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர்; கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ் உதுமாலெவ்வை மற்றும் ஏ.எல் தவம், பிரதேச செயலாளர் ஐ.எம் ஹனிபா, திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன் ஆகியோருடன் திணைக்களத் தலைவர்கள், சமூக மட்ட நிறுவனங்களைச் சார்ந்தோர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வருடம் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

றியாஸ் ஆதம்

LEAVE A REPLY