இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும் தனியார் கல்வியை மூடக் கோரியும் ஆர்ப்பாட்டம்.

0
273

இலவச கல்வியை பாதுகாக்கக் கோரியும் தனியார் மருத்துவ பல்கலைக் கழகத்தினை மூடுமாறு கோரியும் கிழக்கு பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீட மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தினர்.

மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவ பீடத்தில் இருந்து கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு காந்திப் பூங்காவரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.

வைத்திய பீடத்தின் மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மருத்துவ பீடத்தின் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மாலபேயில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக் கழகத்தினை மூடவும் இலவசக் கல்வியை பாதுகாக்குமாறும் இதன்போது கோசங்களை எழுப்பினர்.

இலவச கல்வியையும் இலவச வைத்திய சேவையினையும் அழிக்கும் கல்விக் கடையினை மூடு, மாலபே என்னும் மருத்துவ பட்டம் விற்கும் கடையை மூடு, பல்கலைக்கழக அனுமதியை கூட்டுவோம், போன்ற சுலோகங்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.

அப்துல்லாஹ்

b3d0577b-1378-433f-9aec-71e667b7b0cd cf9eee69-cb95-4463-820e-b9d3a23b8cfd ea51c78f-9c47-4e6f-948c-042fbb28bfc6

LEAVE A REPLY