பொலிஸார் தாக்குதல்; எம்பிலிபிட்டிய நபர் உயிரிழப்பு; அங்கு பதற்றம்

0
463

எம்பிலிபிட்டியவிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின்போது, பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான நபர், இன்று (07) மரணமடைந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான ஏ.எஸ்.எஸ். பிரசன்ன (30) எனும் பெயருடைய இவர், கடந்த டிசம்பர் 31ஆம் திகதி இடம்பெற்ற குறித்த வைபவத்தின்போது தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, குறித்த நபர் இன்று (07) இரத்தினபுரி வைத்தியசாலையில் வைத்து மரணமடைந்துள்ளார்.

குறித்த நபரை தாக்கி, இழுத்துக்கொண்டு சென்றதாக, குறித்த வீட்டாரினால் எம்பிலிபிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் தமது வீட்டுக்குள் நுழைந்து குறித்த வைபத்துக்கும் இடையூறு விளைவித்தாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும், குறித்த நிகழ்வில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்கச் சென்றதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

embilipitiya-prasanna-dead-picketingஅத்துடன் சாதாரண உடையில் இருந்த நபர்கள், தடிகளுடன் வந்து குறித்த வீட்டிலுள்ளோரை தாக்கியதாகவும், இதன்போது பிரசன்ன என்பவர், வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும், தனது கணவரை பொலிஸாரே இரண்டாம் மாடியிலிருந்து தள்ளியதாக, கர்ப்பிணியான பிரசன்னவின் மனைவி பொலிஸில் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளதோடு, அண்மையிலேயே நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸாருக்கு எதிராக எம்பிலிபிட்டிய பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இவ்வார்ப்பட்டம் காரணமாக அங்கு வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டதோடு, நகரின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க்கது.

அத்துடன், குறித்த நிகழ்வின்போது பொலிஸாரைத் தாக்கியதாக தெரிவித்து, குறித்த வீட்டின் உரிமையாளர், அவரது சகோதரரின் மகன்மார் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Thinakaran)

LEAVE A REPLY